Kogilavani / 2016 ஜூன் 05 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை, கந்தகெட்டிய பெரலகமஹடப் பகுதியிலுள்ள கடையொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இருவரை தாக்கியதுடன், மிளகு மற்றும் அலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் மூவரை கந்தகெடிய பொலிஸார் சனிக்கிழமை(4) கைதுசெய்துள்ளனர்.
பதுளை, பிபிலையைச் சேர்ந்த மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் பசறை பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் மேற்படி கடையை வாடகைக்கு எடுத்து மிளகு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில்; பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026