2026 மே 09, சனிக்கிழமை

யாழ். மாணவர்களின் நினைவாக பலங்கொடையில் எச்சரிக்கை நினைவுப்பலகை

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பெலிஹுல்ஓயா ஆற்றில் ஆபத்தான பஹன்துடாவ பிரதேசத்தில் நீராட செல்ல வேண்டாம் என, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை நினைவுப் பலகையொன்றை நிறுவியுள்ளனர்.

கடந்த வருடம், இந்த ஆற்றில் நீரில் மூழ்கி மரணமான மூன்று மாணவர்களின் நினைவாகவே, இந்த எச்சரிக்கை நினைவுப் பலகை நிறுவப்பட்டுள்ளது. குறித்த இடத்தில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுகொண்டிரந்தன கோபால கிருஷ்ணன் சாரங்கன் (நல்லூர்), செல்வரத்தினம் திஷான் (இனுவில்), சரவணபவன் கோபிஷன் (வட்டுக்கோட்டை) ஆகிய மாணவர்கள் மூவர், நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி பலியாகியருந்தனர்.

இந்நிலையில், இம்மாணவர்களின் புகைப்படங்களுடன் நினைவு பலகை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆழமான குழிகளையும் சுழிகளையும்  கொண்ட ஆபத்தான இடமாக இப்பகுதி, இப்பிரதேச மக்களால் அடையாளப்படுத்தப்பட்டு, இம்புல்பே பிரதே சபையால், இப்பகுதிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .