Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யுலிபீல்ட் வட்டாரத்தை வெற்றி கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி, எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கொட்டகலை - யுலிபீல்ட் தோட்ட மதுரை வீரன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் (31) குடிநீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மலையகத் தமிழ் மக்கள், இந்து சமய சிறுதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் ஊடாக, தமது தெய்வ நம்பிக்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்” என்றார்.
மலையகத்தில் தோட்டங்கள் தோறும் இந்து சமய பிரதான தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்கள் ஊடாக பல்வேறு சமய நிகழ்வுகள் இடம் பெறுவதாகத் தெரிவித்த உறுப்பினர், இதற்கு அப்பால் தோட்டப் பகுதிகளில் காவல் தெய்வங்களாக கருதப்படுகின்ற சிறுதெய்வங்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கோவில்களிலும் தொழிலாளர்கள் முக்கிய வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதன் ஊடாக தமது சிறுதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்து சமயத்தின் வளர்ச்சிக்கும் நாம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றோமெனவும் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago