2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

யோகாசனப் பயிற்சி ஆரம்பம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு, யோகாசன பயிற்சிகளை வழங்குவதற்கு, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, கேகாலை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, யோகாசனப் பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு, கேகாலை - ரம்புக்கன மஹிபால ஹேரத் விளையாட்டு மைதானத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, கண்டி யோகா நிலையத்தின் யோகா குருஜி ஜெயகுமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான யோகாசனப் பயிற்சிகளை வழங்கினார். இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .