Janu / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவாக குணமடைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த சிறப்பு ஆசீர்வாத பூஜைகள் பெருந்தோட்ட பகுதிகளில் திங்கட்கிழமை (25) அன்று நடைபெற்றது.
மேலும் , பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட பயணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டதோடு, அவரின் பாதுகாப்பிற்காக சென்ற மெய் பாதுகாவலர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த வழக்கில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் பெருந்தோட்ட பகுதிகளில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளதாக இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்

பொகவந்தலாவ செல்வகந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .