Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 06 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்எச்.எம்.ஹேவா
நுவரெலியா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தால், மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் வைத்து இந்த மனிதாபிமான உதவிகள், வெள்ளிக்கிழமை (03) வழங்கிவைக்கப்பட்டன.
கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் மாணவர்கள் ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், கொழும்புக்கு திரும்பும் வழியில், ரதெல்ல குறுக்கு வீதியில் ஓட்டோ மற்றும் வானுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில், டிக்கோயாவை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் வானின் சாரதியும் மரணமடைந்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் மாணவிக்கு, தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக, 8 இலட்சம் ரூபாய் நிலையான கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கும் நிதியுதவிகள், தேஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago