2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி நபர் ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன் 


ரயிலில்  மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மல்லியைப்பூசந்தி பகுதியில் நேற்று (16) காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா-  அப்கோட் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சிவனு கண்ணியப்பன் வயது 40 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X