எம். செல்வராஜா / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையிலிருந்து கண்டிக்குச் சென்றுக்கொண்டிருந்த பொருள்கள் ஏற்றிச் செல்லும் இரயிலில் மோதுண்டு, தோட்டத் தொழிலாளியொருவர், பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இச்சம்பவம், தெமோதரைக்கும் எல்ல இரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், இன்று (30) நடைபெற்றுள்ளது.
பதுளை, சவ்தம் பெருந்தோட்டத் தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் பேரின்பநாதன் (வயது 46) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி நபர், ரயில் பாதை வழியாக தனது வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த ரயில் மோதுண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக, தெமோதரை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், தெமோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago