Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, தாங்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஆனால், தாங்கள் ரிஷாட் பதியுதீனைப் போன்று ஓடி ஒழிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியிலுள்ள கங்க இஹல கோரள பிரதேசசபையின் பொது நூலகத்தை, நேற்று (17) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்ட விடயமானது, சட்டவிரோதச் செயல் என்றும் இதன் காரணத்தால்தான், 120 பேர் கையொப்பம் இட்ட மனுவொன்றை, ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும அவரை விடுதலை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தவறு செய்த காரணத்தால்தான், அவர் மறைந்திருக்கின்றார் என்றும் தவறு செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் அவரால் ஆஜராக முடியும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago