எஸ்.சதிஸ் / 2019 மார்ச் 25 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்திய பிரிவுத் தோட்டத்தில், கடந்த 35 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் பிரிடோ முன்பள்ளிப் பாடசாலைக்கு, புதிய கட்டடமொன்று விரைவில் அமைத்துக்கொடுக்கப்படும் என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டுப் புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
குறித்த முன்பள்ளிப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர், கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலத்தில், அமைச்சர் திகாம்பரத்தை நேரில் சந்தித்திருந்தனர்.
இதன்போதே, அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார். இந்தப் பாடசாலையின் கட்டடத்துக்காக, 12 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago