2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

லெச்சுமி தோட்டத்தில் 62 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ் 

பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம் மத்தியப் பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேரும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணிய 62 பேருக்கு, நேற்று (11) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக   அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தொற்றுக்குள்ளான இரண்டு ஆண்கள் பொகவந்தலாவை மோரா தேசிய பெருந்தோட்ட நிலைய கொரோனா சிகிச்சை நிலையத்துக்கும் ஏனைய மூன்று பெண்களும் வலப்பனை கொரோனா சிகிச்சை நிலைய்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X