2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

லொறி விபத்து; ஒருவர் பலி

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை – திம்புள்ளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (05) இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட  விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் இவர், ஹட்டன் டிப்போவில் நடத்துநராக கடமையாற்றும் 48 வயதான  இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில், வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நடத்துநர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X