Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரமேஷ்
முறையற்ற விதத்தில் பாதையை கடக்க முயற்சித்த நபர் விபத்துக்குள்ளாகிய நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணியளவில் தலவாக்கலை - நுவரெலியா வீதி, தலவாக்கலை தற்காலிக பஸ்நிலையத்துக்கு அருகில்இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எம்.ஆறுமுகம் என்ற 50 வயது நபரே படுகாமயடைந்துள்ளார்.
பாதையை கடக்க முயற்சித்த இந்நபர் மீது லொறி ஒன்று மோதியதில் இவர், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago