Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரொன்றையும் லக்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர், மாணவிகளை மாத்தளை - நக்கிள்ஸ் (Knuckles) சூழல் பகுதிக்கு அழைத்து சென்று, தனது வாகனத்திற்குள்ளேயே வைத்து அவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பல தகவல்கள் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த ஆசிரியரை மாணவியொருவரின் தந்தை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விரிவாக விசாரணை செய்தபோது, அங்கு நடந்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
லக்கல, பகமூன மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் மிகவும் பிரபலமானவராக கருதப்படும் இந்த ஆசிரியர், தனது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் மாணவ - மாணவிகளுக்கு இடையே காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஆசிரியரும் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
22 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
2 hours ago