Gavitha / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்- சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியில் நிலவும் வகுப்பறைகள் பற்றாக்குறையால், குறித்த கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரை, வெளிப்பகுதியில் நின்றுகொண்டிருந்துள்ளனர்.
உயர்தர வகுப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வகுப்புக்களை, பாடசாலையின் ஆரம்ப வகுப்புகளுக்காக பயன்படுத்துகின்றமையினாலேயே இந்த வகுப்பறை பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையிலுள்ளஆரம்ப வகுப்புகளுக்கு மேல் உள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே, ஆரம்ப வகுப்புக்கள் அனைத்தும் உயர்தர வகுப்புக்களில் நடைபெறுவதாகவும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை (12) வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாடசாலைக்கு வந்த ஹட்டன் கல்விவலயத்தின் பணிப்பாளர் எஸ்.ராஜசேகரம், உயர்தர வகுப்புக்களை ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான தொழில் பயிற்சி நிலையத்தில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கினார்.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago