2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வடிகானை திசை திருப்பியதால் முறுகல்

Kogilavani   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் காமினிபுர பகுதியிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் வடிகானை, தனிநபர் ஒருவர் மூடியமையால், காமினிபுர மக்களிடத்தில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டது

மேற்படி நபர், குறித்த வடிகானை மூடி, வேறுத் திசையில் திருப்பியதால், தண்ணீர் பாதையில் தேங்கி நின்றுள்ளது. இது குறித்து மேற்படி நபரிடம், ஏனையோர் கேட்டபோதே, அவருக்கும் பொதுமக்களுக்கும்இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் நகரசபை அதிகாரிகள், நிலைமையை நேரில் கண்டறிந்ததுடன், வடிகானை வழமையை போன்று மீண்டும் சீரமைக்குமாறு, குறித்த நபருக்கு பணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .