Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 நவம்பர் 12 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 2 மணியளவில், இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கான நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹட்டனில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூக்கு எதிர் திசையில், கினிகத்ஹேனவில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகத்தில் பயணித்த வான், முன்பாக பயணித்த ஓட்டோவை, முறைக்கேடான முறையில் முந்திச்செல்வதற்கு முயன்ற போதே எதிரேவந்த பஸ்ஸூடன் மோதியதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பஸ்ஸூக்கும், வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்த ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
23 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
45 minute ago