2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியரை நியமிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஜூன் 10 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் பகுதியில் தோட்ட வைத்திய அதிகாரி ஒருவரை நியமிக்க கோரி திங்கட்கிழமை (10) காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கடந்த 6 மாத காலமாக தோட்டத்தில் வைத்திய அதிகாரி இன்மையால் பெரும் அசௌகரியத்தை முன்னெடுத்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைபாடு செய்தும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லையெனவும் விரைவாக தோட்ட வைத்திய அதிகாரியை நியமிக்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் கிரேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்குள்ள பாடசாலை மாணவர்கள் குறிப்பிடுகையில் பாடசாலையில் வைத்தோ அல்லது பாடசாலைக்கு வரும் வழியிலோ ஏதாவது வைத்திய உதவி வேண்டுமென்றால் தோட்ட வைத்தியசாலைக்கே செல்வோம் ஆனால் தற்போது வைத்திய அதிகாரி இன்மையால் பெரும் பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் , தோட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் லிந்துலை அல்லது நுவரெலியா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு செல்ல வேண்டி உள்ளது எனவே விரைவாக தோட்ட வைத்திய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலமேகம் பிரசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .