Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மலையக மக்கள் முன்னணியும் அதன் இணை அமைப்புகளின் பெயர்களிலும் மாற்றம்
செய்யப்பட்டு எந்த புதிய அமைப்புகளும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அதன் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளிளும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன், எனவே கட்சியிலிருந்து வெளியேறியவர்களின் பொய் வதந்திகளை நம்பவேண்டாம் என்றார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தங்களுடைய அரசியலை கொண்டு செல்வதற்காக பல பிழையான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள்.
இந்த விடயம் அதிகமாக பதுளை மாவட்டத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக
எங்களுடைய தொழிற்சங்க பிரதிநிதிகளால் எமது தலைமை காரியாலயத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை தலைமைக் காரியாலயம்
ஊடாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தங்களுக்கு திறமை இருந்தால், மக்களிடம் செல்வாக்கு இருக்குமாக இருந்தால், அவர்கள் அவர்களுடைய அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளை சுயமாக தாங்களால் உருவாக்கப்பட்ட கட்சியையும் தொழிற்சங்கத்தையும் அதன் பெயரையும் பயன்படுத்தி முன்னெடுக்க வேண்டும்.
எங்களுடைய அமைப்புகளுக்கு பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் தொழிற்சங்க
நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே மலையக மக்கள் முன்னணியையும் மலையக தொழிலாளர் முன்னணியையும்
பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றவர்களை எந்த காரணம்
கொண்டும் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .