Freelancer / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை - மாகுடுகலை அப்பில் பாம் பகுதியில், விவசாய காணி ஒன்றுக்கும், இயற்கை வன பகுதிக்கும் இடையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஐந்துக்கும் அதிகமானவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில், அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதில் ஹைபொரஸ்ட் மற்றும் டியநில பகுதியை சேர்ந்த 58,மற்றும் 60 வயதுடைய இருவர் ஸ்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago