Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம் கிருஸ்ணா
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலாவாக்கலை - வனிகசேகரபுர குடியிருப்பாளர்கள், தலவாக்கலை நகரில் இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தலவாகலை லிந்துலை நகரசபை தவிசாளர் அசோக சேபால, மேல்கொத்மலை நீர்தேக்க கரையோத்தை அண்மித்த தலவாகல்லை நகர சபைக்குட்பட்ட வனிகசேரபுரம் 80 குயிருப்புகளுடன், மதஸ்தலங்களை கொண்ட குறித்த குடியிருப்பு பகுதியில் பல தடவைகள் மண்சரவுகள் ஏற்படுள்ளது.
மேற்குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியை அண்மித்து செல்லும் மேல்கொத்மலை நீர்தேக்க கரையோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மாத்திரமே பாதுகாப்பு மதில் அமைக்கப்படுள்ளது,
பாதுகாப்பு மதில் அமைக்கப்பாடாத பகுதிக்கு பாதுகாப்பு மதில் அமைக்குமாறு மேல் கொத்மலை நீர்தேக்க திட்ட அதிகாரிகளிடன் கடிதம் மூலமும் வாய் மூலமும் நல தடைவகள் கோரிய போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இந்நிலையில் கால நிலை சீர்கேட்டினால் மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனிகசேகரபுர
குடியிருப்பு பகுதித்தில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகள் ஏற்பட்டு குறித்த பிரதேசம் அபாயத்தை எதிர்நோக்க்கியுள்ளது .
எனவே, மேல் கொத்மலை திட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கரையோர பகுதியில் பாதுகாப்பு மதில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பாதுகாப்பான இடத்தில் வனிகசேகரபுர குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்தை அமைத்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago