Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி,'கொரோனா' வைரஸ் தொற்று காரணமாக, தொழிலாளர்களின் வேலைநாள்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் எனவே, வரட்சி நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், பெருந்தோட்டக் கம்பனிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாதத்தில் 25 நாள்கள் கட்டாயம் வேலை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வரட்சி நிலவுகின்ற காலங்களில் அது சாத்தியம் ஆகாமல் போய் விடுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பரவிவரும் “கொரோனா” வைரஸ் அச்சுறுத்தலால், தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அதில் தோட்டத் தொழிலாளர்களும் அடங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், இதனால், குறைவான வேலை நாள்களுக்குக் கிடைக்கும் வேதனத்தைக் கொண்டு நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத பொருளாதாரப் பிரச்சினைக்கு மக்கள் தள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே, வரட்சியால் வேலை நாள்கள் குறைந்துள்ள நிலையில், இப்போது “கொரோனா” வைரஸ் காரணமாக வேலை இழக்கும் நிலைமையும் தோன்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தொழிலாளர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவை வழங்கி அதை மாதாமாதம் அவர்களின் சம்பளத்திலிருந்து கழித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .