Freelancer / 2024 ஜனவரி 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்தனர்.
மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம், நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.
ஏனைய நாட்களில் அநுராதபுரம், நுவரெலியா, தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கரட் மொத்த விலை 1500.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1700.00 ரூபாவாகவும் மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.
ஒரு கிலோ கிராம் போஞ்சி மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1,400.00 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும், சில்லறை விலை 1,300.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர் . R
32 minute ago
36 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
56 minute ago
2 hours ago