Janu / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, அலபலாவலவத்துர பகுதியில், வனவிலங்குகளின் பல்வேறு பாகங்கள் உட்பட, 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, அலபலாவலவத்துர மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
விமானப்படையின் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல வனவிலங்கு அலுவலகம், குருநாகல் வனவிலங்கு உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் குருநாகல் நாரம்பெத்த பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் இந்த சோதனையில் இணைந்திருந்தனர்.
விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 1050 கிலோ வல்லப்பட்டையுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து கடமான் கொம்புகள், மூன்று மான் கொம்புகள், ஒரு தனி மான் கொம்பு, பாதுகாக்கப்பட்ட சிப்பிகளுடன் ஒரு லொறி பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு வனவிலங்கு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


12 minute ago
13 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
18 minute ago
25 minute ago