2025 மே 03, சனிக்கிழமை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Mayu   / 2024 ஜூன் 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் கன ம​ழை, பலத்த காற்று காரணமாக பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம தெரிவித்தார்.

இதற்கமைய,  செவ்வாய்க்கிழமை (26) ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஷெனன்வத்தை பகுதியில் மாரா மரத்தின் பல கிளைகள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியின் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,  ஹட்டன் கொழும்பு,  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகள்  போது கவனமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸ் அத்தியட்சகர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X