Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் புதன்கிழமை (0 1) மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் அட்டாலை பிரதேசத்தைச் சேர்ந்த அனுஷா ஜயசேகர (52 வயது) என்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், அவரது இரண்டு குழந்தைகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த மகள் மற்றும் மகன் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் வேன் சாரதி கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .