Janu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலையில் செவ்வாய்க்கிழமை (13) தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மொனராகலையில் இருந்து பதுலுவெல நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து தம்பகெல்ல பதுலுவெல வீதி, கொப்பேவ சந்திக்கு அருகில் வைத்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான 19 வயதுடைய இளைஞனும் பின்னால் பயணித்த 40 வயதுடைய நபரும் பலத்த காயமடைந்து மொனராகலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தம்பகல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமணசிறி குணதிலக்க
11 minute ago
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
30 minute ago