Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தாண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அதிபரொருவர் நாவலப்பிட்டி பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
நாவலப்பிட்டி- ஹுனுகொட்டுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
2006, 2014ஆம் ஆண்டுகளில் மாகாண சபைத் தேர்தலுக்காகப் போட்டியிட்டுள்ளதாகவும் அவ்வாறு இருக்கையில் வாக்களிப்பு உரிமைக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தன்னுடைய பெயர் உள்ளடக்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்புல்பிட்டி கிராம உத்தியோகத்தரால் தான் தன்னுடைய பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கிராம உத்தியோகத்தர், வாக்காளர் படிவத்துடன் பல தடவைகள் குறித்த அதிபரின் வீட்டுக்குச் சென்ற போதும், அதிபர் வீட்டிலிருக்கவில்லை இதுவே அவரது பெயர் உள்ளடக்கப்படாமைக்கான காரணம் என்றும் கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
46 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago