Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
நகரசபையின் மாதாந்தக் கூட்டம், விசேட கூட்டங்கள் நடைபெறும் தினங்களில், பொறுப்பு வாய்ந்த பிரதான உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என, பலாங்கொடை நகரசபை உப தலைவர் எம்.ரீ.எம் ரூமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பலாங்கொடை சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் சமிக வெவேகெதர தலைமையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று நடைபெறும் இச்சபையில், நகரசபையின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதான பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள் பலரைக் காணவில்லை என்றும் இந்நிலையில், இன்று சபை கூடியதால், எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அவர்கள் சமூகமளிக்காதமையால், கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்றும் எனவே, இவ்வாறான விசேட நாள்களில் அவர்களுக்கு விடுமுறை அனுமதி வழங்கவேண்டாம் என்றும் அவர் கோரினார்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago