Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 13 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும், கொத்மலைக்கு வருகைதந்து, செவ்வாய்க்கிழமை (13) ஆய்வு செய்தனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ருவான் குணசேகர உள்ளிட்ட குழுவினர், பேருந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, பின்னர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்து, பின்னர் பொலிஸ் நிலையத்திற்குள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பதில் பொலிஸ்மா அதிபரிடம்அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்தக் குழுவுடன் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மானவும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .