Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் பதுளைக்கு செல்வதற்கு விசேட ரயில் சேவையை நடத்துவதற்கு ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் மலையகம் நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
இந்தக் காலப்பகுதியில் ரயில் சேவைக்கு அதிகளவு கேள்வி நிலவுவதை அவதானிக்க முடிவதுடன், ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில், நாளைய தினம் முதல் கொழும்பில் இருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காலை 07.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச்செல்லும் வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago