2026 மே 14, வியாழக்கிழமை

dd

’விட்டுக்கொடுப்பின் மூலம் பிரதமரின் நிலை உயரும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 

இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர் என்றும் எப்போதும் மக்கள் பக்கம் இருந்து முடிவுகளை எடுக்கும் அவர், ஜனாதிபதி​ தேர்தலில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால், அதன்மூலம் இவருடைய நிலை உயருமே தவிர இறங்கிவிடாது என்றும் மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் மூலமாக, 25,000 ரூபாய் பெருமதியான சமயலறை பொருள்களும் அத்தியவசியப் பொருள்களும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாக்கப்படும் என்றும் இதன்மூலம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரியானதொரு முடிவை எடுப்பார் என்று அனைத்து மக்களும் எதிர்பார்த்து வருவதாகவும் பங்காளி கட்சிகளும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை ஊடகங்களூடாக அறிய முடிகின்றது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .