Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
விதானையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (04) ஈடுபட்டனர்.
லுணுகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், லுணுகலை கிராம சேவக உத்தியோகத்தர்களும் இணைந்து லுணுகலை பிரதேச சபைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
லுணுகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த வாகன சாரதிகளினால் லுணுகலை பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (03) இரவு 10.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.
லுணுகலை பிரதேசத்திற்கு எரிபொருளை கொண்டு வருவதற்கு குறித்த கிராம உத்தியோகத்தர் முயற்சி செய்யவில்லை என்று கூறியே தாக்கியதாக, லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .