Freelancer / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
ஹட்டன் - அவிசாவளை வீதியில் கினிகத்தேன, ரஞ்சுலாவ பகுதியில் நேற்று (17) இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் கால் மற்றும் கை எலும்பு முறிந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கராப்பிட்டியவிலிருந்து தலவாக்கலை நகருக்கு வந்த வேன் மீண்டும் தலவாக்கலையிலிருந்து கராப்பிட்டியவுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தபோது கினிகத்தேன ரஞ்சுலாவ பகுதியில் வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
6 minute ago
12 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago
14 minute ago