Editorial / 2017 டிசெம்பர் 01 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, டி.கேதிஸ், மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதி, வட்டகொடை தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில், இன்றுக் காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 35 வயது நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாரென, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ்ஸும் பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த புத்திக சமிந்தர வடுகெதர என்பவரே, ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026