Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சங்கராஜ வீதியின் கிங்ஸ்பாக் ஹோட்டலுக்கு அருகில், நேற்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கொன்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த கொன்ஸ்டபிள் மீது, பஸ்ஸொன்று மோதியதையடுத்து, அவர் தூக்கி வீசப்பட்டு, எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதி விழுந்துள்ளார்.
இதையடுத்து, இவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கமமெத்த, செனரத்வெல, ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வெவகே டக்லஸ் ஜயரத்ன என்ற கொன்ஸ்டபிளே, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் இந்த விபத்துக்குக் காரணமாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026