2026 மே 02, சனிக்கிழமை

வியாபார நிலையங்கள் தீக்கிரை

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ், டி.கேதீஸ்,  எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்

 

தலவாக்கலை பிரதான நகரிலுள்ள இரண்டு வியாபார நிலையங்களில், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ காரணமாக, அவ்வியாபார நிலையங்கள், முற்றுமுழுதாக எரிந்து சாம்பராகியுள்ளன என்று, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரைண்டிங் மில் மற்றும்  அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் (பென்சி கடை) ஆகிய இரண்டு வியாபார நிலையங்களே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.

தலவாக்கலை - லிந்துலை நகர சபையினரின் தீயணைப்புப் பிரிவினர்   இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தீ விபத்து தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .