Kogilavani / 2021 ஜனவரி 21 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.சுரேஸ்குமார்
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மடுல்சீமை மஹாதோவ தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில், வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நிதிப்பற்றாக்குறை நிலவிவருவதால் வீடுகளை அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவு, மடூல்சீமை மஹாதோவ தோட்டம் அமுனுதோவ பிரில், கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து இடம்யெர்ந்து, மஹாதோவ மேற் பிரிவு வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை சீரானதன் பின்னர், அந்தக் குடும்பங்கள் மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு மழைக் காலநிலை நிலவும்போது குடியிருப்புகளில் இருந்து இடம்பெயர்வதும் பின்னர் மீண்டும் குடியிருப்புகளுக்கு வருவதுமாக அம்மக்கள் அவல வாழ்க்கை வாழ்ந்துவந்தனர்.
தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள், பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத்தியதன் பயனாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மஹாதோவ அமுனுதோவ பிரிவுக்கு, 17 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தால் வீடுகள் அமைப்பதற்கான காணியும் ஒதுக்கீடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு நிதி இல்லை என்று பிரதேச செயலகம் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாரிய அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்பாக, பாதுகாப்பான இடத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்துமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago