Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், எஸ் சதீஸ்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரை நியமித்தால், அவருக்கு ஆதரவு வழங்கப்படும் என, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலையகத்தில், மலையக அபிவிருத்தி அதிகார சபையினூடாக, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில், மனிதவள பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் நுவரெலியா பீட்ரூ ஸ்கிராப் தோட்டத்தில், 50 தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அப்போதுதான், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு, தாங்கள் வாக்குறுதி வழங்கியதைப் போன்று, தற்போது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
80 வருடங்களாக, மலையகத்தில் அரசியல் செய்து வந்தவர்களுக்கு, நுவரெலியா நகரில் 7 பேர் காணியையேனும் கொடுக்க முடியாவில்லை என்றும் ஆனால், தாமதமானாலும் சொன்னதை செய்யாமல் விடுபவன் நான் அல்லன் என்றும் அவர் கூறினார்.
வீடு கட்டுவதற்கு தாமதாமிறது; 25, 50 வீடுகளே வழங்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகக் ஸறிய அவர், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு, தான் ஒன்றும் வித்தைக் காரன் அல்லன் என்றும் கூறினார்.
ஆனால், அனைத்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் நிச்சயம் எதிர்காலத்தில் வீடுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago