2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து  ஒரு பெண் குழந்தையின் சடலம் செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, டங்கொல்ல பகுதியில் ஒருவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாவனெல்லையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில்  ஜூலை 31 ஆம் திகதி குழந்தை பிறந்திருந்தாலும், அந்த நேரத்தில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், எனவே அவரது தந்தை மற்றும் பாட்டி அதை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி மத சடங்குகளைச் செய்த பின்னர் வீட்டின் முற்றத்தில் புதைத்ததாகவும் கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல பதில் நீதவான் திருமதி எரங்கிகா வீரசிங்க முன்னிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் உடலை மாவனெல்ல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். சந்தேக நபர் தற்போது கண்டி மருத்துவமனையின்   சிகிச்சை பெற்று வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .