Janu / 2023 நவம்பர் 07 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா - தெல்தோட்டையில் பிரதேசத்தில் இருந்து ஹேவாஹேட்ட வரையான வீதி மிகவும் பழுதடைந்து காணப்படுவதை கண்டித்து பிரதேசவாசிகள் மற்றும் பஸ் சாரதிகள் ஒன்றிணைந்து நூல்கந்துர பிரதேசத்தின் நாராஹின்னவிற்கு அருகில் வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெல்தோட்டையில் இருந்து ஹேவாஹேட்ட வரையான 18 கிலோமீற்றர் தூரமும், நூல்கந்துரவில் இருந்து 8 கிலோமீற்றர் தூரமும் மிகவும் பழுதுயடைந்துள்ளதாகவும், மக்கள் நடக்கக்கூட முடியாதளவுக்கு நீர் நிரம்பியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் வீதியை இடித்து அகற்றுவதற்காக வந்த பின்னர் இன்று வரை வரவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், போராட்டக்காரர்களால் வீதியின் குறுக்கே பெரிய மரங்கள் மற்றும் கற்களை வைத்து வீதியை மறைத்துள்ளனர்.
இவ்வீதியில் சுமார் 10 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், வீதியின் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் அவற்றை முறையாக இயக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பகுதியில் முதன்முதலாக தேயிலை பயிரிடப்பட்ட நூல்கந்தூர பிரதேசம் அமைந்துள்ளது மற்றும் இந்த பகுதிக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வரும் பிரதேசம் இந்த பிரதான வீதி உடைந்து பாரிய குழிகளாக காணப்படுவதால் தற்போது சுற்றுலா பயணிகள் வரும் வீதம் கூட குறைந்தவாறு காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர் .
நவி




45 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago