Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தான் அதிகாரத்துக்கு வந்தால், ஹட்டன் நகரின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும் குப்பை பிரச்சினைக்குத் அதிரடியாக தீர்வு காண்பேன் என ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் வேட்பாளரான வைத்தியர் அழமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.
தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து, அறிஞர்களுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எம்முடைய பிரதேசத்தில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளால் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சுழலுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் சுகாதாரத்துக்கும் சீர்கேடுகளை குப்பைகள் விளைவிக்கின்றன.
அந்த நிலைமை தொடர்பில் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளேன் என்றார். குப்பைகள் மட்டுமன்றி, அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வீதிகள் சேதமடைந்துள்ளன.
அவற்றை செப்பனிட்டு, வீதித்தொகுதியை ஏற்படுத்துவதே முக்கியமாகும் என்றார். இவையெல்லாம் நகர சபையின் ஊடாக முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகளாகும்.
இம்முறை அதிகாரத்துக்கு வந்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வை பெற்றுக்கொடுப்பேன். அதிலும் முக்கியமாக குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago