Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார
மாத்தளை நாவுல நகரில், வெற்றிலை மற்றும் பாக்கின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள், பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு, 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெற்றிலை ஒன்று, தற்போது 75 சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது தமது வியாபாரத்தில் பாரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரங்களில் நீடித்த தொடர் மழை காரணமாக, வெற்றிலை மற்றும் பாக்குகளின் விளைச்சல் அதிகரித்துள்ளமையும் அதிகளவான வெற்றிலை, பாக்குகள் சந்தைக்குக் கொண்டுவரப்படுவதுமே, இதற்குக் காரணமென்றும், வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெற்றிலை, பாக்கின் விலை குறைந்துள்ளமையால், பகமுன, எலஹெர, நாவுல, யடவத்த, பல்லேபொல மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளே, பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026