2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளுக்குச் செல்லும் மலையகக் காணி

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மவுசாகலை பகுதியில் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு காணி ஒன்றை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கெப்பிட்டல் இன்வஸ்மன்ட் நிறுவனத்தினால் 25 மில்லியன் அமெரிக்க டொலர் இதில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மவுசாகலை பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியை அண்மித்துள்ள காணியொன்றையும், மவுசாகலை நீர்த்தேக்கத்திலுள்ள சிறிய தீவொன்றையும் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, உத்தேச திட்டத்தை செயற்படுத்தும் நிறுவனத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X