Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூலை 13 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹாலிஎல அலுவலக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 55 வயதான சந்தேக நபர், மட்டக்களப்பு, கல்லடி சரவணா வீதியில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், கைலாகொட பதுளை மஹியங்கனை வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளர். சந்தேக நபருடன் அந்த நிறுவனத்தில் உள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹலிஎல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago