2026 ஜனவரி 21, புதன்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய கேகாலை

Editorial   / 2021 மே 14 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரா.கமல்)

நேற்று பெய்த கன மழை காரணமாக  கேகாலையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அந்தவகையில் அவிசாவளை ஹட்டன் வீதியில் தெஹியோவிட்ட பிட்டதெனிய பகுதியும் தத்துவ நகரமும்  வெள்ளத்தில் மூழ்கியதால் தெஹியோவிட்ட அவிசாவளை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. 

அத்துடன் கரவனல்ல கேகாலை வீதியில் அங்குருவெல்ல, கன்னந்தொட்டை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கரவனல்ல கேகாலை வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையால்  களனி கங்கையை சூழவுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X