2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வேன் மீது மோதிய கார்

R.Tharaniya   / 2025 மே 06 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத யாத்திரைக்காக வந்த கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை(06) அன்று மதியம் 12.00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ் விபத்து நிகழ்ந்தது.

திஸ்ஸமஹாராம விலிருந்து சிவனொளி பாதயாத்திரையை மேற்கொள்ள வந்த ஒரு குழுவினர், தங்கள் யாத்திரையை முடித்துக்கொண்டு திஸ்ஸமஹாராம வுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து நடந்த நேரத்தில் காரில் நான்கு பேர் பயணித்த போதும், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார், காரின் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .