2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வேவஹின்னவில் வேலை நிறுத்தம்

Kogilavani   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார்

தோட்ட நிர்வாகத்தின் ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, தெமோதரை வேவஹின்ன தோட்ட மக்கள், நேற்று (25) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்டக் காரியாலயத்துக்கு முன்பாக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் உரியமுறையில் தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பது இல்லை என்றும் தொழிலாளர்கள் மீது பாரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் தொழிலாளர்களுக்கு, உரிய வேலை நாட்களை வழங்குவது இல்லை என்று தெரிவித்துமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, தோட்டக் காரியாலயம் இரண்டு மணித்தயாலங்கள் மூடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X