Sudharshini / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்று விற்பனை செய்துவந்த பிரபல பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் உட்பட அறுவரை மொனராகலை பொலிஸார் திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மொனராகலை நகரின் பிரபல பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் தலைமையில் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இதுவரை எட்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை திருடியுள்ளதுடன் இவற்றின் உதிரிப்பாகங்களை தனித்தனியாக விற்பனை செய்துள்ளதாகவும் இதற்காக வெள்ளவாயவிலுள்ள கராஜ் ஒன்றை பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் மொனராகலை நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago