Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
புதிய வீடமைப்புத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த, வட்டவளை பெருந்தோட்டக் கம்பனியும் ஸ்டெதண்ட் தோட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டன் ஸ்டெதண்ட் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டக் காரியாலயத்தை இன்று முற்றுகையிட்டதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேற்படித் தோட்டத்தில், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கடந்த 31 ஆம் திகதி அமைச்சர் ப.திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், குறித்த வீடமைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில், தோட்ட நிர்வாகமும் வட்டவளை பெருந்தோட்டக் கம்பனியும் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதால், வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்டெதண்ட் மற்றும் புரூட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தோட்டக் காரியாலயத்தையும் முற்றுகையிட்டனர்
இதனையடுத்து, தோட்ட நிர்வாகத்துக்கும் டிரஸ்ட் நிறுனத்துக்கும் இடையில் இடம்பெற கலந்துரையாடலில், தாம் வீடமைப்புத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தோட்ட நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டதுடன் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago